மாநகராட்சி ஆணையர் தலைமையில் கோவை மேற்கு மண்டலத்தில் குறைதீர் கூட்டம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாதத்தின் முதல் வாரம் மட்டும் கோவைக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களின் அலுவலகத்தில் நடைபெறும். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 மணியளவில் நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம்.

அதன்படி, இன்று மேற்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், சாலைகள் சீரமைக்கும் பணிகள் என பல்வேறு உதவிகள் கோரி 7 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், மேற்கு மண்டல உதவி ஆணையர் கே.ராமைய்யா, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், மாநகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...