மீலாதுன் நபி தினத்தில் எஸ்பி வேலுமணி வாழ்த்து: அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என வலியுறுத்தல்

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.


கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (செப்டம்பர் 17) தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், உலகெங்கும் மகிழ்ச்சியுடன் இத்திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அன்னல் முகமது நபிகள் பிறந்த தினமான இந்த "மீலாதுன் நபி" திருநாளில், நபிகள் நாயகத்தின் போதனைகளின்படி இவ்வுலகில் அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்றும், அதற்கு இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி தனது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...