கோவையில் பதிவு செய்யாத மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி எச்சரித்துள்ளார். அனைத்து விடுதிகளும் இணையம் வழியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்தும் சட்டம், 2014, (விதிகள் 2015)ன்படி அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விடுதிகள் தவறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்காக இணைய வழி நடைமுறையை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நடத்தும் தங்கும் பெண்கள் விடுதி, பெண் குழந்தைகள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் அனைத்தும் ஒழுங்குமுறைச் சட்டம், 2014 மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அனைத்து விடுதிகளும் போதிய இடவசதியுடன் சுற்றுப்புற சுகாதாரத்துடன், தங்குபவர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதோடு, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து தடையின்மை சான்று பெற்று, உரிய ஆவணங்களுடன் விடுதியை பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் இதுவரை பதிவு மேற்கொள்ளாமல் செயல்படும் மகளிர் விடுதிகள் அனைத்தும் உடனடியாக இணையம் வாயிலாக பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பை மீறி செயல்படும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...