கொடநாடு காவலாளி கொலை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்.பி முரளிரம்பா பேட்டி

கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் உதகை எஸ்.பி முரளிரம்பா கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சயான் என்பவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தர்ராஜனிடம் சயான் உடல் நிலை குறித்து கேட்டறிந்த எஸ்.பி முரளிரம்பா பின்னர், சயானிடம் விசாரணை நடத்தினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சயானிடம் எஸ்.பி முரளிரம்பா விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிரம்பா கூறுகையில், முதலில் சயானின் உயிர் மிகவும் முக்கியம். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சையில் சயான் முழு நினைவுடன் நலமுடன் உள்ளார்.

விசாரணையின் போது அவர் மெதுவாக பேசினார். முழு விசாரணைக்கு ஏற்றபடி அவர் உடல்நலம் இல்லை. அதே வேளையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் நுட்ப ரீதியாகவும் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என முரளிரம்பா கூறினார்.

இதைத்தொடர்ந்து, சயானை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது ஏன் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, சயானை கேரள போக்குவரத்துக் காவல்துறைதான் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்" என்றார். கூடலூரைச் சேர்ந்த சஞ்சீவன் என்பவருக்கும் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு பதிலளிக்க முரளிரம்பா மறுத்து விட்டார்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...