உலக இருதய தினத்தையொட்டி கோவையில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மராத்தான்

கோவையில் செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினத்தையொட்டி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மராத்தான் நடைபெறுகிறது. இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (GKNM) சார்பில் உலக இருதய தினத்தையொட்டி "ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்" என்ற பெயரில் விழிப்புணர்வு மராத்தான் நடைபெறவுள்ளது. இந்த மராத்தான் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி காலை 5:30 மணியளவில் பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கும்.

இந்த நிகழ்வு இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மராத்தான் நிகழ்வுக்கான பதக்கம் மற்றும் டி-சர்ட் வெளியீட்டு விழா ஏற்கனவே கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

GKNM மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமி கூறுகையில், "கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் பதிப்பில் சுமார் 2,000 பேர் பங்கேற்றனர். அதில் கிடைத்த நிதியுதவியில் இதயம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 குழந்தைகள் பயனடைந்தனர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள மராத்தானில் புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகளில் இருந்து குணமடைந்த குழந்தைகளும் பங்கேற்கவுள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இந்த நிகழ்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்" என்றும் கூறினார். இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ticketprix.com என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் அல்லது 97900 72303 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...