உதவி வேளாண் அலுவலர் பணியிடத்திற்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 333 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

வரும் ஜூலை 2ம் தேதியன்று நடைபெறும் இந்த எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக மே 2ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 5 மணி வரையிலும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகுப்பில் சேர உதவி வேளாண் அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் போட்டோ ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெறுமாறு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...