மேட்டுப்பாளையம் அருகே கோவிலுக்கு நேர்ந்த ஆடு திருட்டு: தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் அருகே புத்தர் நகரில் மதுரை வீரன் கோவிலுக்கு நேர்ந்த ஆடு திருடப்பட்டது. ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள புத்தர் நகர் ஆதி திராவிடர் மக்கள் குடியிருப்பு பகுதியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 80க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள மக்கள் கோவிலுக்கு ஒரு ஆட்டு கிடாயினை நேர்ந்து விட்டு, அதனை அனைவரும் ஒன்றினைந்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால், நேற்று இரவு ஊர் மக்கள் வளர்த்து வந்த கிடாயினை மர்மநபர்கள் திருடி சென்றதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ஆடு கிடைக்கவில்லை. இதனையடுத்து, காரமடை காவல்நிலையத்தில் ஊர் மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊர் மக்கள் சார்பில் காணாமல் போன ஆட்டின் புகைப்படங்களுடன் கூடிய அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஆடு திருடுபோனது குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊர் மக்கள் திருடப்பட்ட ஆட்டினை மீட்டுத் தருமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...