கோவையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி - 5 பேர் கைது

கோவை காரமடை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் சிறுமியை மீட்டு, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


கோவை: கோவை காரமடை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை கலெக்டர் அலுவலக குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரிக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காரமடை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சிவா நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது. சிறுமியை மீட்ட போலீசார், அங்கிருந்த 5 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்: பல்லடம் இச்சிப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் (23), திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜதுரை (30), ஊட்டியைச் சேர்ந்த மோனிஷா (23), திருவள்ளூர் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த கீதா (24), சென்னையைச் சேர்ந்த பவானி (24) ஆகியோர்.

போலீசார் கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நண்பர்கள் என்பதும், ஊட்டியைச் சேர்ந்த மோனிஷா காரமடையில் சில மாதங்கள் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

மோனிஷாவின் தங்கைக்கும் 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதன் மூலம் மோனிஷாவிற்கு சிறுமி பழக்கமானார். இந்த பழக்கத்தின் மூலம் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும் ஆசை வார்த்தை கூறியும் உள்ளார். இதனைத் தொடர்ந்தே சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஐவர் மீதும் போக்சோ சட்டம் மற்றும் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி கோவை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...