அக்னி வெயில் இன்று முதல் ஆரம்பம்- வரும் 28ம் தேதிவரை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

அக்னி வெயில் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

ஏப்ரல் மாத மத்தியில் திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 100 டிகிரி என்ற அளவை எட்டியது. அதுவும் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெயில் காலை 8 மணியில் இருந்தே கடுமையாக இருந்து வருவதால் குழந்தைகள், முதியோர் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். குடைகள் இல்லாமல் பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதுவும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் போன்றவற்றின் விற்பனையும் களை கட்டியுள்ளது. மேலும் குளிர் பானங்கள் விற்பனையும் அமோகமாக உள்ளது. இன்று தவங்கும் இந்த அக்னி என்னும் கத்திரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை இருக்கும். கத்திரி வெயில் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், அனல் காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரப்பதம் குறைந்து வறண்ட வானிலை காணப்படுவதால் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...