குடிசை மாற்று வாரியத்தில் ஊதியம் தராமல் கொலை மிரட்டல்: மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தமைக்கு ஊதியம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மின் இணைப்பு துண்டிப்பு குறித்தும் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தமைக்கு ஊதியம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

காளிமுத்து தனது மனுவில், குடிசை மாற்று வாரிய கீரணத்தம் வடக்குத்திட்ட பகுதியில் பணிபுரிந்ததற்கான ஊதியம் கேட்டதற்கு காண்ட்ராக்டர் குப்புராஜ் ஊதியம் தராமல் மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் குடியிருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



இதேவேளையில், பாதிக்கப்பட்டவருடன் வந்த கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையைச் சேர்ந்த இளங்கோவன், கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் மோசடியில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது புகார் அளித்ததாகவும், அவர்கள் மீது விசாரணை நடந்து வரும் சூழலில் புகார் அளித்ததற்காக கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை தனக்கு எதிராக தூண்டிவிட்டதில் தான் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், சாதியைக் கூறி இழிவுபடுத்தப்பட்டதாகவும், குற்றவாளிகள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறிய இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புகார் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...