சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக விடப்பட்ட பெண் குழந்தை மீட்பு

கோவை ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை தனியாக விடப்பட்டு இருந்தது. போலீசார் குழந்தையை மீட்டு அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.


கோவை: சென்னையில் இருந்து கோவை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக விடப்பட்டிருந்த பெண் குழந்தை மீட்கப்பட்டு அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.

செப்டம்பர் 21 அன்று இரவு 11.15 மணியளவில் சென்னையில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர், தூய்மை பணியாளர்கள் ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு பெட்டியில் உள்ள சீட்டில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தூய்மை பணியாளர்கள் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் கஜேந்திரன் மற்றும் ரம்யா ஆகியோர் குழந்தையை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நீண்ட நேரம் கடந்தும் குழந்தையை காணவில்லை என்று யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. குழந்தையின் பெற்றோர் ரயிலில் தவறவிட்டு சென்றனரா அல்லது வேண்டுமென்றே விட்டுச் சென்றனரா என்பது தெளிவாகவில்லை.

தற்போது போலீசார் குழந்தையின் பெற்றோரின் விவரங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதுவரை குழந்தையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கிணத்துக்கடவில் உள்ள அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...