கோவையில் பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத்தின் பேரில் மோசடி செய்த மூவர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத்தின் கணக்காளர் நாகராஜ்  கோவை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கோவையில் சிலர் மலிவு விலைக்கு சமையல் எண்ணெய் வாங்கி அதை டின்களில் அடைத்து, அதில் தங்கள் சமையல் எண்ணெய் நிறுவனத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்வதாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அனந்த ராஜ் (35), சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் (35) மற்றும் விவேகானந்தன் (35) ஆகிய மூவரும் முறைகேடாக சமையல் எண்ணெய் விற்பது தெரிவந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 200 லிட்டர் போலி சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...