கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கோவை தொழிலதிபர் சஞ்சீவன் விளக்கம்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கிற்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், அரசியல் முன்விரோதம் காரணமாக அதிமுகவை சேர்ந்த 3 பேர் தன்னை இந்த வழக்கில் சிக்க வைக்க வதந்திகளை பரப்பியதாகவும் கோவையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவன் விளக்கம் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த சஞ்சீவன் என்ற தொழிலதிபர், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் பர்னிச்சர் உள்ளிட்ட அனைத்து மரவேலைகளையும் செய்துள்ளார். இந்நிலையில், கொடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கிற்கும் சஞ்சீவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, சஞ்சீவன்-யிடம் போலீசார் விசாரணை நடத்தப்போவதாகவும், சஞ்சீவன் வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனது பர்னிச்சர் கடையில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சீவன், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கிற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார்.

அரசியல் ரீதியாக தனக்குள்ள எதிரிகள் தன்னை இவ்வழக்கில் சிக்க வைக்க வதந்திகளை பரப்பிவிட்டதாக கூறிய அவர், அதிமுகவை சேர்ந்த கூடலூர் பகுதி நிர்வாகிகள் 2 பேர் மற்றும் ஊட்டியை சேர்ந்த ஒருவர் அரசியல் முன்விரோதம் காரணமாக இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்த போது தான் சார்ஜாவில் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாக கோவையில் தான் தங்கியிருப்பதாகவும் கூறிய சஞ்சீவன், வெளிநாட்டிற்கு எங்கும் தப்பி செல்லவில்லை என தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தன்னிடம் விசாரணை எதுவும் நடத்தவில்லை எனவும், இவ்வழக்கில் தொடர்புடைய கனகராஜை மட்டும் தனக்கு அறிமுகம் எனவும், வேறு யாரையும் பார்த்தது கூட கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...