கோவை தொழிலதிபர் மனைவியிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

கோவையில் தொழிலதிபர் மனைவியிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி செய்த வழக்கில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொலைபேசி மூலம் மோசடி செய்யப்பட்டது.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜவுளித் தொழிலதிபர் ஆனந்தன் (52) மனைவி ஆர்த்தி (47) என்பவரிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஆர்த்தியின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அழைத்தவர்கள் தங்களை மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், பணப்பரிமாற்றம் தொடர்பாக நடைபெற்ற மோசடி குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறினர். இதை நம்பிய ஆர்த்தி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பின்னர், அந்நபர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி, அதன் விவரங்களைக் கேட்டனர். மேலும், ஆர்த்தியின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.52 லட்சத்தை, தாங்கள் கூறும் வங்கி எண்ணுக்கு பரிமாற்றம் செய்யுமாறும், விசாரணை முடிந்த பிறகு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதை உண்மை என நம்பிய ஆர்த்தி, அந்நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.52 லட்சத்தை பரிமாற்றம் செய்தார். அதன் பிறகு, அந்நபர்கள் தொடர்பை துண்டித்துவிட்டனர். அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இது குறித்து செப்டம்பர் 23 அன்று ஆர்த்தி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...