கோவையில் இரைப்பை உணவுக்குழாய் முதல் சர்வதேச மாநாடு மற்றும் செயல் விளக்க கருத்தரங்கம்

உணவுக்குழாய் மற்றும் இரைப்பை நோய்க்கான முதல் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் செயல் விளக்க கருத்தரங்கம் வருகிற மே மாதம் 11-ம் தேதி முதல் 15ம் தேதி வரை கோவையில் நடைபெறவுள்ளது.

ஜெம் மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் இம்முகாமில் வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உணவுக்குழாய் இரைப்பையில் ஏற்படும் நோய்கள் குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் புற்றுநோய்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படவுள்ளது.

மேலும், உணவுக்குழாய் இரைப்பை நோய் சிகிச்சைக்காக ஐஎஸ்இஎஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மும்பையில் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்றவரும், ஜெம் மருத்துவமனை தலைமை மருத்துவருமான சி.பழனிவேலு ஒருமனதாக தலைவராக தேர்வு பெற்றார். டாடா மெமோரியல் கேன்சர் மருத்துவமனை மருத்துவர் பிரமேஷ் செயலாலராகவும் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 மருத்துவர்கள் செயல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மருத்துவர் பழனிவேலு தலைமையில் மருத்துவர் பார்த்தசாரதி, ரமேஷ், பரத் ஆகியோர் இம்மருத்துவ மாநாட்டை நடத்துகின்றனர். இம்மாநாட்டில் கொரியாவைச் சேர்ந்த ஹயுங், டி.ஜே.கிம், ஜப்பானைச் சேர்ந்த கௌஸ்க் நருமியா, ஹர்ஸி ஒசுகி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வார்வல்டு, சீனாவைச் சேர்ந்த லி கௌஸின் குந்தான் ஆகிய வெளிநாடுகளில் இருந்து புகழ்பெற்ற பேராசிரியர்களும், 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பங்கேற்கின்றனர். மேலும், இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து இந்த மாநாட்டிற்கு இத்துறையைச் சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சிறுதுளை லேப்பிராஸ்கோப் இன்றைய தினத்தில் சிறந்த அறுவை சிகிச்சை முறையாகும். ரோபோட்டிக்கில் இன்னும் துல்லியமாகவும், முழுமையாக புற்று கட்டியை அகற்றுவது சாத்தியம்.

வரும், 7ம் தேதி வயிறு சம்பந்தப்பட்ட இலவச மருத்துவ முகாம் கோவை ஜெம் மருத்துவமனையில் நடைபெறுகிறது. நெஞ்செரிச்சல், ஹெர்னிய வீக்கம், கேன்சர், கல்லீரல் கோளாறுகள் உள்ளவர்கள் இலவச அலோசனை பெறலாம். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 50 சதவிகித சலுகையும் புற்றுநோய் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக அளிக்கவும் கோவை ஜெம் மருத்துவமனை அறக்கட்டளை, கோயம்புத்தூர் ரோட்டரி புறுநோய் உயிர்காக்கும் அறக்கட்டளை இணைந்து செயல்படுகிறது. இம்முகாமில் பங்கேற்க 04222325100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...