தமிழகத்தில் உள்ள 13 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தல்

மக்கள் விடுதலை முன்னணி பொள்ளாச்சியில் மண்ணுரிமை மீட்பு அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியது. மாநில தலைவர் மாரிமுத்து, தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



Coimbatore: மக்கள் விடுதலை முன்னணி சார்பில் மண்ணுரிமை மீட்பு அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி திடலில் நடைபெற்றது. நகர தலைவர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய மாரிமுத்து, "தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. தமிழகத்தை 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்கின்ற திராவிட ஆட்சியாளர்கள் நிலத்தின் மீது கவனம் செலுத்த முடியாத காரணத்தால், பஞ்சமி நிலங்களை மீட்டு இல்லாத ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்," என்றார்.



"உழுதவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம் என்ற அடிப்படையில், யாரெல்லாம் நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்களோ அவர்கள் குடும்பத்திற்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்," என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், "சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளாகியும் இன்னும் தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டை குவளை, இரட்டை சுடுகாடு முறை, கோவில் நுழைவு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு சமூக நலத்துறை இதன் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று மாரிமுத்து வலியுறுத்தினார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...