கோவை விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடம்: அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு

கோவை விளாங்குறிச்சியில் ரூ.114.16 கோடி செலவில் கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடத்தை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார். இக்கட்டிடம் 3,200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என தெரிவித்தார்.



Coimbatore: கோவை விளாங்குறிச்சி பகுதியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இக்கட்டிடம் குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பல காரணங்களுக்காக நான்கு ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகி வந்த இக்கட்டிடம் தற்போது ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுவதும் நிறைவடைந்து முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும் என்றும் கூறினார்.



இந்த வளாகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மொத்தம் 3,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தான் நிதி அமைச்சராக இருந்தபோது, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இணையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஹைடெக் சிட்டிகளாக கோவை, வடக்கு சென்னை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளை உருவாக்குவது குறித்து அறிவித்திருந்ததாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இப்பணிகளை வேகப்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.



GST தொடர்பாக பேசிய அமைச்சர், தான் நிதி அமைச்சராக இருந்தபோது GST-யில் இருந்த குறைகளை சுட்டிக்காட்டியதாகவும், நல்ல மனதோடு அனைவருக்கும் வாய்ப்பளித்து GST-யில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நினைத்தால் விரைவில் இதில் திருத்தம் கொண்டு வரலாம் என்றும் தெரிவித்தார்.



இந்த புதிய தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடம் கோவையின் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...