முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்: கோவையில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

கோவையில் உக்கடம் பேருந்து நிலையத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி செந்தில் பாலாஜியின் ஜாமீனை கொண்டாடினர். உச்ச நீதிமன்றம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஜாமீனை வழங்கியது.



Coimbatore: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, கோவையில் திமுக தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீண்ட காலமாக ஜாமீன் வழங்கப்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கோவையில் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் திமுக தொண்டர்கள் ஒன்றுகூடி பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற திமுக தொண்டர்கள், பேருந்து பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.



இந்த கொண்டாட்டங்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை திமுகவினர் பெரும் வெற்றியாக கருதி இவ்வாறு கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...