மயிலாடுதுறை-கோவை முன்பதிவு இல்லா ரயில் சேவை கோரிக்கை: தெற்கு ரயில்வேயின் முடிவால் ஏமாற்றம்

கோவை-மயிலாடுதுறை முன்பதிவு இல்லா ரயில் சேவைக்கு பதிலாக, மயிலாடுதுறை-பாலக்காடு வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் முன்பதிவு இல்லாத ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தெற்கு ரயில்வே தலைமையகம் மயிலாடுதுறை-பாலக்காடு வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவு ரயில் பயணிகள் நலச்சங்கம் (WARP-CPPD) உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோரிக்கை வைக்காத பாலக்காடுக்கு ரயில் சேவையை நீட்டித்திருப்பது பெரும் முரணாக இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

டெல்டா பகுதியில் இருந்து கோவைக்கு வந்து படிக்கும் மாணவர்கள், வழிபாட்டிற்காக கோவையிலிருந்து கும்பகோணம் செல்லும் மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்து பயனடையும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட வேண்டும் என்று கோரி வந்தனர்.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

RAAC இணைச் செயலாளர் சதீஷ் கூறுகையில், "குறைந்த கட்டணத்தில் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய வகையில், மயிலாடுதுறை-கோவை முன்பதிவு இல்லாத ரயில் சேவை தொடங்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இதை ஆதரித்து வருகின்றனர். ஆனால் தெற்கு ரயில்வேயின் இந்த உத்தரவு மிகவும் கண்டிக்கத்தக்கது," என்றார்.

ரயில் பயணிகள் நலச்சங்க (WARP-CPPD) செயலாளர் மோகன் குமார், "கோவையில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் பாலக்காடுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டிருப்பது மக்களை பெரும் வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த உத்தரவை ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்து ரயில் சேவையை கோவைக்கு கொண்டு வர வேண்டும்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...