கோவை இடையர்பாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி கொள்ளை

கோவையில் தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது இந்த கொள்ளை நடந்துள்ளது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகை மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா காலனி அருகிலுள்ள இடையர்பாளையம், பாரிநகரைச் சேர்ந்த நாகராஜன் (70 வயது) என்பவர் தொழிலதிபராக உள்ளார். கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி, நாகராஜன் தனது குடும்பத்துடன் தொழில் நிமித்தமாக பெங்களூரு சென்றிருந்தார். அவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.

நேற்று (செப்டம்பர் 25) நாகராஜன் தனது வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த 70 பவுன் நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவை திருடப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.

இதனையடுத்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, குமார், சுரேஷ் உள்ளிட்ட சிலர் இந்த கொள்ளையை நடத்தியது தெரிய வந்தது.

இது குறித்து நாகராஜன், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், துணை ஆய்வாளர் தீபா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...