கோவை சி.ஆர்.பி.எஃப். பயிற்சி கல்லூரியில் 567 உதவி ஆய்வாளர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா

கோவை துடியலூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் 96 ஏ பேட்ஜை சேர்ந்த 567 உதவி ஆய்வாளர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஐ.ஜி வெங்கடேஷ் கலந்து கொண்டார்.


கோவை: கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி முடித்த 96 ஏ பேட்ஜை சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் 567 பேருக்கு பதக்கம் வழங்கும் விழா மற்றும் அணிவகுப்பு சி.ஆர்.பி.எப். வளாகத்தில் நடைபெற்றது.



இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு இங்கு உடற்பயிற்சி, பாதுகாப்பு பயிற்சி, துப்பாக்கி சுடுதல், நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.



96 ஆ பேட்ஜில் கடந்த 6 மாதமாக பயிற்சி பெற்ற 567 வீரர் வீரங்கனைகளுக்கு பதக்கம் வழங்கும் விழா பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி முதல்வர் ஐ.ஜி வெங்கடேஷ் கலந்து பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்ட வீரர் வீராங்களைகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.



100க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் யோகா செய்து காண்பித்தனர்.



மேலும் தேசிய கொடியின் வண்ணத்தில் உடையணிந்து பல்வேறு விதமான நடனங்கள் ஆடினர்.



தொடர்ந்து மல்லர் கம்பத்தில் பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்து அசத்தினர்.



பயிற்சி முடித்த 567 வீரர் வீராங்களைகளுக்கு உதவி ஆய்வாளருக்கான பேட்ஜ் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் நேரடியாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் துணை அதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர். முடிவில் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...