கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு: லஞ்சம் வாங்க முயன்ற கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் கைது

திருப்பூர் மாவட்டம் போகலூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உரங்களை வழங்கி வந்த இவர் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கருப்புசாமியுடன் மேலும் 2 பேர் மீதும் முறைகேடு வழக்கு பதியப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றத்திலும்  கருப்புசாமி வழக்கு தொடுத்தார். ஆனால், இரண்டு நீதிமன்றங்களும் கருப்புசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டன. 

இதனை தொடர்ந்து, தன் மீதான துறை ரீதி விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளரான வசந்தராஜ்-ஐ அணுகினார்.

இதற்காக வசந்தராஜ் ரூ.5 ஆயிரத்தை கருப்புசாமியிடம்  லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து, அவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு தேநீர் கடைக்கு வந்தனர். மேலும், இரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கருப்புசாமியிடம் கொடுத்த அவர்கள், அவற்றை வசந்தராஜ்-இடம் கொடுக்குமாறு கூறினார்.

அப்போது, தேநீர் கடைக்கு வந்த வசந்தராஜ், கருப்புசாமியிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை லஞ்சமாக வாங்கினார். அங்கு மறைந்திருந்த போலீசார் கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளரான வசந்தராஜ்-ஐ கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வசந்தராஜ்_ஐ கைது செய்தனர்.

இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...