கோவை அரசு மருத்துவமனையில் உலக இருதய தின விழிப்புணர்வு ஊர்வலம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இருதய தினத்தையொட்டி, இருதய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற உள்ளது. மருத்துவமனை முதல்வர் Dr.அ.நிர்மலா கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இருதய தினத்தையொட்டி, இருதய விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.



உலக இருதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (28/09/24) இருதய தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊர்வலத்தை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் Dr.அ.நிர்மலா MS DGO அவர்கள் கொடி அசைத்து தொடக்கிவைக்கிறார்.



உடலின் முக்கிய உறுப்பான இருதயம், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜன், ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. எனவே, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால், புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இருதய நோய் ஏற்படுகிறது. இதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் இருதய நோய் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். இது உலக அளவில் ஏற்படும் உயிரிழப்பில் 5 இல் ஒன்றாகும். தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் 60% இருதய நோய் பாதிப்பால் மட்டும் ஏற்படுகிறது. எனவே, ஆரோக்கியமான உணவு சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் துறையில், ஒரு மாதத்திற்கு சராசரியாக 8000 முதல் 9000 வரை வெளி நோயாளிகள், 300 உள்நோயாளிகள் முறையே சிகிச்சை பெறுகின்றனர். நமது இருதயவில் துறையில், ஒவ்வொரு மாதமும் 2,000 ECHO பரிசோதனைகள் செய்யபடுகிறது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் (ICCU) ஒரு மாதத்திற்கு 200 முதல் 250 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்திலேயே மிக அதிக அளவில், கடந்த ஆண்டில் மட்டும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 2151 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

கோவை மருத்துவகல்லூரி மருத்துவமனை இருதயவியல் துறையில் 2018 ஆம் ஆண்டு CATH LAB துவங்கப்பட்டு, 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இதுவரை 12,000க்கும் மேற்பட்ட ஆஞ்சியோ பரிசோதனைகள் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 84 பேருக்கு நிரந்தர பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது OCT, IVUS, IABP ஆகிய அதிநவீன கருவிகளை பயன்படுத்தி ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டு வருகிறது. பிறவி இருதய குறைபாடுகளை சரி செய்யும் டிவைஸ் கிளோசர் சிகிச்சை (ASD-6,VSD-1,PDA-2,PTMC-6,BPV-1,COA-stenting-1) இதுவரை 17 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

உலக இருதயத் தினத்தையொட்டி மருத்துவ மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இருதய மருத்துவத் துறை சார்பில், பல்வேறு துறையை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கெளரவிக்கப்பட உள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...