தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு: கோவையில் விழிப்புணர்வு பேரணி

கோவையில் தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவையொட்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணியை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன் தொடங்கி வைத்தார்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் இறுதி நாளான செப்டம்பர் 30 அன்று, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பேரணிக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், செல்வபுரம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வட்டாரங்களைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள் வள்ளி கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



மேலும், பெண்கள் காய்கறிகளை ஆபரணமாக அணிந்தும், முகத்தில் வண்ணம் பூசியும் கவனத்தை ஈர்த்தனர். இதையடுத்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் கோவையின் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பங்கேற்பாளர்கள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர்.



இந்த விழிப்புணர்வு பேரணி மூலம், சமூகத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...