கோவை தெலுங்குபாளையத்தில் கத்தி முனையில் செல்போன், பணம் பறித்தவர் கைது

கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பவம் நேற்று (செப்டம்பர் 29) நடந்தது.


கோவை: கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தெலுங்குபாளையம் சுப்பிரமணிய உடையார் தெருவைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று (செப்டம்பர் 29) அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் நின்றிருந்த மனோஜை, அங்கு வந்த ஒரு வாலிபர் கத்தி முனையில் மிரட்டினார். பின்னர் மனோஜிடம் இருந்த ரூ.1,400 மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இது குறித்து மனோஜ் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்போன் மற்றும் பணத்தை பறித்தவர் தெலுங்குபாளையம் சிவசக்தி நகரைச் சேர்ந்த ரஞ்சித் குரு (39) என்பவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...