கோவையில் கஞ்சா விற்ற மாணவர்கள் உட்பட 4 பேர் கைது: 220 கிராம் கஞ்சா பறிமுதல்

கோவை குனியமுத்தூர் போலீசார் ரோந்து பணியின் போது கஞ்சா விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர். இதில் இரண்டு மாணவர்களும் அடங்குவர். மொத்தம் 220 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று (செப்டம்பர் 29) மேற்கொண்ட ரோந்து பணியின் போது கஞ்சா விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர். இதில் இரண்டு கல்லூரி மாணவர்களும் அடங்குவர். சம்பவம் குறித்த விவரம்:

கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று (செப்.29) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சா விற்ற கே.கே. நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாசில் (21), மற்றும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படிக்கும் 2 மாணவர்கள் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் ஒரு எடை மெஷின் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போன்று, எல்ஜி தோட்டம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை செய்த கெம்பட்டி காலனியை சேர்ந்த பாலாஜி (29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...