மத்திய நிதி அமைச்சரின் கருத்துக்கு எதிராக கோவையில் விஸ்வகர்மா சமூகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விஸ்வகர்மா சமூகம் குறித்த கருத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவைக்கு வந்திருந்தபோது, "விஸ்வகர்மா என்பது ஒரு ஜாதியும் இல்லை பாரம்பரிய தொழிலும் அல்ல" என்று கூறியதற்கு எதிராக, தமிழ்நாடு ஐந்தொழில் விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, மத்திய நிதி அமைச்சரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



அவற்றில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விஸ்வகர்மா சமுதாயம் ஒன்று இல்லை என்று கூறியதை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு வெளியிட்டுள்ள பார்பர் விஸ்வகர்மா என்ற தபால் தலையை திரும்ப பெற வேண்டும், இந்திய அரசாங்கம் விஸ்வகர்மா சமூகத்தை தேசிய சமூகமாக அறிவிக்க வேண்டும் என்பன அடங்கும்.

தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய நிதி அமைச்சரின் கருத்து மிகவும் தவறானது என்றும், அதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் கூறினார். கருத்தை திரும்ப பெறவில்லை என்றால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், வருகிற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர் எச்சரித்தார்.

மேலும், தச்சு, தங்க நகை, பாத்திரம், இரும்பு மற்றும் சிற்பம் ஆகிய ஐந்து தொழில்களை செய்பவர்கள் மட்டுமே விஸ்வகர்மா தொழிலாளர்கள் என்றும், மத்திய அரசின் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 18 தொழில் செய்பவர்களை சேர்ப்பது நியாயமற்றது என்றும் பாண்டியன் கூறினார்.

இறுதியாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...