காந்தி ஜெயந்தி: உடுமலையில் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை - நகராட்சி ஆணையர் அறிவிப்பு

உடுமலை நகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி கடைகளுக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் ப.பாலமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், "காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மற்றும் ஆடுவதைக்கூடம் செயல்பட தடைவிதிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதைக்கவோ அல்லது இறைச்சிகளை விற்பனை செய்யவோ கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "உத்தரவை மீறி செயல்பட்டால் இறைச்சியை பறிமுதல் செய்து அழிப்பதுடன் உரிமம் இரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பு உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடை உரிமையாளர்களுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...