உடுமலையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்: நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதான குழாய் உடைப்பு காரணமாக அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய இரு நாட்களுக்கு 10 வார்டுகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் குடிநீர் விநியோகத்தில் இரண்டு நாட்கள் தடை ஏற்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடுமலை நகராட்சியின் முதல் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அக்டோபர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களில் நகரின் வார்டு எண் 12, 15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 25 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்படும் பகுதி மக்கள் தேவையான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு உடுமலை நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

குடிநீர் விநியோகத் தடை காரணமாக ஏற்படும் அசௌகரியங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கம் போல குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...