உடுமலையில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

உடுமலையில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (INTUC) சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு, ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள காமராஜர் பவனில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (INTUC) சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவிற்கு INTUC தலைவர் கோவை செல்வன் தலைமை வகித்தார். உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ.ரவி வரவேற்புரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் தென்னரசு உள்ளிட்டோர் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகியோரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.



இதையடுத்து உடுமலை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கும், பழைய பஸ் நிறுத்தத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும், ராஜேந்திரா சாலையில் உள்ள நேரு சிலைக்கும் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் INTUC பொருளாளர் உத்தமராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், லோகநாதன், கிட்டுசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜனார்த்தனன் உள்ளிட்ட INTUC தொழிற்சங்க நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...