சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்த தன்னார்வலர்கள்



கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களிடையே கோவை மாநகர காவல்துறையினர்  பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இவர்களுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோவை பிரதான சாலையான லட்சுமி மில்ஸ் சிக்கனலில் போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன் எஸ்.என்.ஆர் கல்லூரி மாணவர்கள், சாலை நண்பர்கள், 'எஜூதர்மா' அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் 'ஷாப்த்ரூ' செயலியின் நிறுவனர்களும் கலந்து கொண்டு  வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். 



மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்தும், காரில் செல்பவர்களுக்கு சீட் பெல்ட் அணிவது குறித்தும் மற்றும் மது அருந்திவிட்டு பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சாலையில் நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.





Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...