கிணத்துக்கடவில் வாழைக்கன்று வாங்க மானியம் - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

கிணத்துக்கடவு வட்டாரத்தில் தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிட வாழைக்கன்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,000 மானியம் அளிக்கப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.


கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல மானிய திட்டங்களை வழங்கி வருகிறது. இதில், தோட்டக்கலைத்துறை சார்பில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக, தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடுவதற்கு, வாழைக்கன்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னையில் வாழை ஊடுபயிர் செய்ய, 30 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு, வாழைக்கன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு, ஒரு ஹெக்டேர் மட்டுமே வாழை கன்று மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, 80 சதவீதமும், பிற கிராமங்களுக்கு 20 சதவீதமும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கதளி மற்றும் நேந்திரன் என இரண்டு வாழைகன்றுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கன்றுகள் பெற ஆர்வமுள்ள விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி இன்று (அக்.3) வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...