அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி ஏற்பை முன்னிட்டு கோவையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீண்டும் பதவி ஏற்பை முன்னிட்டு ஸ்ரீ ராஜ விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கோவை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் அசோக் பாபு ஆறுகுட்டி தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதுடன், 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பணியாற்றி, கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் 99% வரலாற்று வெற்றியை பெற்று தந்தவர் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த 15 மாதங்களுக்கு முன்பு அமலாக்க துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜாமினில் விடுதலை பெற்று மீண்டும் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனைக் கொண்டாடும் பொருட்டு கோவையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியின் ஆலோசனைப்படி, துணை செயலாளர் அசோக் பாபு ஆறுகுட்டி தலைமையில் கோவை மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீகாந்த் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை செய்து 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 4-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேல்சாமி, 5-வது வார்டு துணை செயலாளர் சுந்தரராஜ், கார்த்திக், நகர் மற்றும் பகுதி கழக உடன் பொறுப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...