கோவை ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை: வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்

கோவை ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஈஷா தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய விவரங்கள் இங்கே.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் (அக்.3) தடை விதித்துள்ளது. மேலும், ஈஷா தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா யோக மையத்தில் உள்ள தனது மகள்களை மீட்டுத்தரக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாகவும், ஈஷா யோகா மையத்தின் மீதான அனைத்து குற்ற வழக்குகள் குறித்தும் விசாரணை செய்து முழுமையான அறிக்கையை அக்டோபர் 4-ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தலைமையில் 6 குழுக்களாக பிரிந்து, கடந்த இரண்டு நாள்களாக ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஈஷா யோகா மையம் தரப்பில் காவல்துறையினரின் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஈஷா யோகா மையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இவை மதச் சுதந்திரம் தொடர்பான பிரச்சினை என்றும், இது மிகவும் அவசரமான மற்றும் தீவிரமான வழக்கு என்றும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். சத்குரு மிகவும் மதிக்கப்படுபவர் மற்றும் லட்சக்கணக்கான பின் தொடர்பவர்களைக் கொண்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம், ஈஷா மையத்தில் உள்ள ஓய்வுபெற்ற பேராசிரியரின் இரண்டு மகள்களுடனும் இணைய வழியாக விசாரணை மேற்கொண்டு, அவர்களின் கருத்துகளை பதிவு செய்தது. மேலும், ஈஷா ஆசிரமத்தின் மருத்துவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்திருப்பது பற்றியும், பழங்குடி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்ததாக எழுந்துள்ள புகாருக்கும் ஈஷா மையத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், குற்றச்சாட்டுக்கு உள்ளான மருத்துவர் அங்கே தங்குபவர் அல்ல, நாள்தோறும் வந்து செல்பவர் என்றும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளிக்கும் ஈஷா மையத்துக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

நீதிபதிகள், ஓய்வுபெற்ற பேராசிரியரின் இரண்டு மகள்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் விருப்பத்தின் பேரில்தான் ஆசிரமத்தில் இருப்பதாகவும், சுதந்திரமாக இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு வழக்கின் விசாரணையை மாற்றியது. மாநில காவல்துறை இதுவரை நடத்திய விசாரணையின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...