கோவை வேடப்பட்டியில் ரூ.708 லட்சம் மதிப்பில் 225 பயனாளிகளுக்கு வீடுகட்டும் ஆணையினை அமைச்சர் வழங்கினார்

கோவை மாவட்டம், வேடப்பட்டி பேரூராட்சி நம்பியழகன் பாளையத்தில் அம்மா உடற்பயிற்சிக் கூடம் திறப்புவிழா, மற்றும் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று ரூ.30 லட்சம் மதிப்பில் அம்மா உடற்பயிற்சி கூடம் கட்டும் பணியினை தொடங்கிவைத்தார். தொடரந்து, நம்பியழகன்பாளையம், பசுபதிபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ரூ.708.75 லட்சம் மதிப்பில் 225 பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார். 



இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான அனைவருக்கும் வீடுகட்டும் திட்டம் துவக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து ஜெயலலிதாவின் நல்லாசியுடன் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஜெயலலிதா இத்திட்டத்தை துவக்கிவைக்கும் பொழுது, முதல்கட்டமாக 10 லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு கட்டி வழங்கப்படும், அதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.2.10 லட்சம் முழு மானியம் வழங்கப்படும் என அறிவித்து துவக்கி வைத்தார். அதற்கேற்ப இன்றும் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் குடிசைகளே முற்றிலும் இல்லாத மாநிலமாகவும் மற்றும் ஓட்டுவீடு, சிமெண்ட் சீட் வீடு ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் காண்கீரீட் வீடு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே ஆகும்.

அதுமட்டுமல்லாமல், போக்குவரத்தினை எளிமையாக்கும் வகையில் உயர்மட்டப் பாலங்கள், அடிப்படை வசதிகள், தனிநபர் இல்லக் கழிப்பிடங்கள், கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் என மக்களுக்கு நலன்பயர்க்கும் திட்டங்கள் பலவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் மேலும், தொடர்ச்சியாக இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களை என்னென்றைக்கும் வழங்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், குடிசைமாற்று வாரியம் கண்கானிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் ராஜசேகரன், துணை இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...