கோவையில் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சிக்கான முன்னோட்ட நிகழ்ச்சி: 500க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு

கோவையில் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சிக்கான முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர். மத்திய ஜவுளித்துறை செயலாளர் ரச்சனா ஷா உரையாற்றினார்.


Coimbatore: கோவை லீ மெர்டியன் ஹோட்டலில் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சிக்கான முன்னோட்ட நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 4) நடைபெற்றது. இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய ஜவுளிகளை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் விதமாக டெல்லியில் நடைபெற உள்ள 2025க்கான ஜவுளி கண்காட்சியின் முன்னோட்ட (ரோட் ஷோ) நிகழ்வு இது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஆதரவோடு 12 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்கள் (Export Promotion Councils (EPCs)) இணைந்து, இந்தியாவை சர்வதேச ஜவுளி சந்தையில் முன்னணியில் கொண்டு செல்லும் நோக்கோடு "பாரத் டெக்ஸ் 2025" என்ற உலகலாவிய ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை புது தில்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் நொய்டாவில் உள்ள இந்திய எக்ஸ்போ சென்டர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.



இந்திய ஜவுளித்துறையின் சிறப்பையும், திறனையும் கொண்டாடும் வகையிலும் இந்திய ஜவுளி உற்பத்திகளை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் இந்த கண்காட்சியில் உலகெங்கிலும் உள்ள தொழில்துறை தலைவர்கள், வடிவமைப்பாளர்கள், பிரதிநிதிகள், வாங்குவோர் மற்றும் ஜவுளி ஆர்வலர்கள் ஆகியோர் ஒன்றினைய உள்ளதால் "பாரத் டெக்ஸ் 2025" ஜவுளி துறையில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்.

இந்நிலையில் இந்த நிகழ்விற்கான (ரோட் ஷோ) முன்னோட்ட நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோட்டை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



டெல்லியில் நடக்கும் கண்காட்சியில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க கட்டணங்களை குறைக்க வேண்டும், விசைத்தறி மானியம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய ஜவுளித்துறை செயலாளர் ரச்சனா ஷா, "டெக்ஸ்டைல் துறையை சார்ந்த அனைவரையும் அழைத்து வருவதால் அனைத்து பொருட்கள் வாங்க கூடிய ஒரு சந்தையாக இந்தியா இருக்கும். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு அனைவரும் பங்கேற்க வேண்டும்" என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாரத் டெக்ஸ் இணைத் தலைவர் பத்ரேஷ் தோஹியா, மத்திய ஜவுளித்துறை செயலாளர் ரச்சனா ஷா, மத்திய ஜவுளித்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சக்ஸேனா, தமிழக தொழில்துறை செயலாளர் அருண் ராய், SIMA துணைத் தலைவர் துரை பழனிசாமி, மேலும் மத்திய மற்றும் மாநில ஜவுளித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...