கோவை செங்குளத்தில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோவை குனியமுத்தூர் செங்குளத்தில் மீன் பிடிக்க சென்ற 24 வயது இளைஞர் மற்றும் அவரது 8 வயது மருமகன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளத்தில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் மற்றும் அவரது மருமகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை மார்க்கெட் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த பாரிஸ் அகமத் (24) என்ற இளைஞர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அவரது அக்காள் மகன் ஹயான் அஹமத் (8) இரண்டாம் வகுப்பு மாணவனாக இருந்தார். இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி குனியமுத்தூர் செங்குளத்துக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கவலையடைந்த உறவினர்கள் சுற்றுப்புற பகுதிகளில் தேடினர். ஆனால் அவர்களைக் காணவில்லை. அடுத்த நாள் அக்டோபர் 5ஆம் தேதி செங்குளம் அருகே ஒரு மோட்டார் சைக்கிள், செருப்புகள் உள்ளிட்ட உடைமைகள் கிடந்ததைக் கண்ட உள்ளூர் மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் குளத்தில் தேடுதல் நடத்தியபோது, பாரிஸ் அகமத் மற்றும் ஹயான் அஹமத் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. இருவரின் சடலங்களும் கோவை ESI மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. உறவினர்கள் இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இருவரும் மீன் பிடிக்க முயன்றபோது குளத்தில் தவறி விழுந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...