கோவையில் RSS அணிவகுப்பு ஊர்வலம்: 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பு

உச்சநீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, கோவை சிவானந்தா காலனியில் RSS தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை சிவானந்தா காலனியில் இன்று நடைபெற்ற ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) அணிவகுப்பு ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்றனர்.



உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.



RSS-ன் ஸ்தாபன தினமான விஜயதசமியன்று ஆண்டுதோறும் நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.



இந்த ஆண்டு RSS-ன் நூற்றாண்டு துவக்கத்தை முன்னிட்டு கோவையில், வடவள்ளி மற்றும் சிவானந்தா காலனி ஆகிய இரு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.



சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஊர்வலம், அப்பகுதியில் துவங்கி முக்கிய சாலைகள் வழியாக நல்லாம்பாளையம் சாலை அம்ருதா பள்ளி மைதானத்தில் நிறைவுபெற்றது. அணிவகுப்பு ஊர்வலத்தைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சியும் நடைபெற்றது.



ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு எவ்வித சம்பவங்களும் இன்றி அமைதியாக நிறைவடைந்தது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...