உடுமலை அருகே விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உடுமலை அருகே பொலிரோ வாகனமும் டெம்போ டிராவல்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலரும் காயமடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொலிரோ வாகனமும் டெம்போ டிராவல்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 12 மணியளவில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து தியாகராஜன் (45), அவரது மனைவி பிரித்தி (40), மகன்கள் ஜெயப்பிரியன் (11), ஜீவப்பிரியன் (13) மற்றும் பெற்றோர் உள்ளிட்ட 6 பேர் கோவை மாவட்டம் தாமரைக்குளத்தில் நடந்த இறப்பு நிகழ்வுக்குச் சென்று திரும்பி வந்தனர்.



உடுமலை அருகே உள்ள கருப்புசாமி புதூர் பகுதியில், பாலக்காடு நோக்கி வந்துகொண்டிருந்த டெம்போ டிராவல்ஸுடன் அவர்கள் பயணித்த பொலிரோ வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தியாகராஜன், அவரது மனைவி பிரித்தி, மகன் ஜெயப்பிரியன் மற்றும் தாய் மனோன்மணி (65) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



விபத்தில் படுகாயமடைந்த தியாகராஜனின் தந்தை நாட்ராயன் (75) மற்றும் மகன் ஜீவப்பிரியன் ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

டெம்போ டிராவல்ஸில் பயணித்த 23 பேரில் சுமார் 12 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் பாலக்காட்டிற்குச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த சோகமான சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...