மாநகராட்சி பணிகள் குறித்து வடக்கு மண்டல பகுதியில் மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 41-வது வார்டுக்குட்பட்ட கணபதி, பாரதி நகர் பகுதிகளில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும், கணபதி, பாரதி நகர் பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, இராமகிருஷ்ணாபுரம், சக்தி ரோடு பகுதியில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாரியம் மற்றும் மூடு பலகை அமைக்கும் பணிகளை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையருடன் நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், மாநகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...