மோசடி வழக்கில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரின் மாமனார் உள்பட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் முத்துசாமி மகன் துரைசாமி. இவரின் சகோதர்கள் சுந்தரம் மற்றும் தனபால். இந்த மூவரும் பங்குதாரராக உள்ள வணிக வளாகம் கோவை அவிநாசி சாலையில் உள்ளது.இந்நிலையில் வணிக வளாகத்தின் ஒப்பந்த பத்திரத்தில் துரைசாமியின் பெயரை நீக்கி புதியதாக பத்திரத்தை சுந்தரம் மற்றும் தனபால் தயார் செய்துள்ளனர். மேலும், துரைசாமிக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்தனர். ஒப்பந்த பத்திரத்தில் பெயரை நீக்கியும், வணிக வளாகம் மூலம் கிடைக்கும் வருவாயை தனக்கு தராமல் மோசடி செய்ததாக துரைசாமி, கடந்த 2001-ஆம் ஆண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி,ஒப்பந்தத்தை அழித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கோவை நீதித்துறை நடுவர் எண் 3-இல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி வேலுசாமி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில், சுந்தரம், தனபால் ஆகியோர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 3 ஆண்டு கடுங் காவல் சிறை, தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். இதில், சுந்தரம், தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய் பாஸ்கரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...