கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஆளுநரிடம் மனு அளித்தார்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் என்ற மாணவர், பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்தார்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், பல்கலைக்கழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற்றபோது மனு அளித்தார். இச்செயல் விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.



பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரகாஷ், "பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மனு கொடுத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் புகார் கொடுத்துள்ளேன்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழிநடத்தும் பேராசிரியர்கள், அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களது குழந்தைகளை பார்ப்பதற்கும், பாத்திரம் கழுவவும், வங்கி வேலைக்கும் ஆய்வு மாணவர்களை பயன்படுத்துவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளேன்," என்றார்.

பிரகாஷ் தனது புகாரில், ஆதிதிராவிடர் விடுதிகள் பற்றியும், ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பிற்கான அதிக செலவு, விடுதி பராமரிப்பு நிதி முறைகேடு, விளையாட்டு மைதானங்களின் பயன்பாடு தடை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.

"கடந்த 5 வருடங்களாக விளையாட்டு தினம் நடத்தாமல் பணத்தை மட்டும் வசூலித்து வருகின்றனர். இந்த அனைத்து பிரச்சினைகளையும் கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்," என பிரகாஷ் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...