மேட்டுப்பாளையம், இருகூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: நாளை மின்தடை

மேட்டுப்பாளையம், இருகூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 15 அன்று பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் மற்றும் இருகூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (அக்டோபர் 15) பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூர், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இருகூர் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் இருகூர், ஒட்டர்பாளையம், பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), ஒண்டிப்புதூர், ராவத்தூர், சிந்தாமணிப்புதூர், சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), தொட்டி பாளையம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்களது அன்றாட வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...