சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது: பணிக்கு திரும்ப உடன்பாடு

சாம்சங் தொழிற்சாலையில் 09.09.2024 முதல் நடந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அரசு தலையீட்டால் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப ஒப்புக்கொண்டனர்.



சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 முதல் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் விளைவாக, சாம்சங் நிர்வாகம் தொழிலாளர்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிவித்தது. தொடர்ந்து, 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

1. தொழிலாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

2. நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

3. பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

4. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளுக்கு நிர்வாகம் எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. தொழிலாளர்கள் அனைவரும் விரைவில் பணிக்குத் திரும்ப உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...