கோவை சிறுவாணி அணை நீர்மட்டம் 43.49 அடியாக உயர்வு: தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.49 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக, கேரள அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 43.49 அடியாக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்த அணையில் தேக்கப்படும் நீர், கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை 265 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீராக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணீர் சிறுவாணி குடிநீர் திட்டத்திலிருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது. மொத்தம் 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நீர்மட்டம் தற்போது (அக்டோபர் 16) 43.49 அடியாக உயர்ந்துள்ளது.

அண்மையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 60 மில்லி மீட்டரும், அடிவாரத்தில் 14 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 9 கோடியே 90 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அணைப் பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த மழை தொடர்ந்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...