கோவை மாநகராட்சியில் ரூ.3 முதல் 12 லட்சம் வரை வருவாய் கொண்டோருக்கு வட்டி மானியத்தில் வங்கிக் கடன்


கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டு பகுதிகளில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருவாய் கொண்ட பிரிவினருக்கு வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் இதுகுறித்து தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டு பகுதிகளில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி நகரப்பகுதிகளில் வசிக்கும் ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை உடைய நலிவடைந்த மக்களுக்கு 323 சதுர அடி உட்பரப்பு கொண்ட வீடுகட்ட ரூ.3 லட்சம் வரையும், ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை உள்ள குறைந்த வருவாய் கொண்ட பிரிவினருக்கு 646 சதுர அடி உட்பரப்பு கொண்ட வீடுகட்டுவதற்கு ரூ.6 லட்சம் 20 ஆண்டு வரை 4 சதவிகித வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியும், ஆண்டு வருமானம் 6 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருவாய் கொண்ட பிரிவினருக்கு வீடுகட்டுவதற்கு ரூ.12 லட்சம் வரை 20 ஆண்டு வரை 3 சதவிகித வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியும் அளிக்கப்படும்.

மேலும், ஏற்கெனவே உள்ள வீட்டின் விரிவாக்கத்திற்கும், கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை வாங்குவதற்கும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும்.

மேலும், கணக்கெடுப்பில் விடுபட்ட பயனாளிகள் உடனடியாக மாநகராட்சி மைய அலுவல தகவல் மையத்தை அனுகி, கொடுக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பயனாளிகள் விபரங்களுக்கு 94437 04002 என்ற எண்ணை அழைக்கவும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...