பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக செயலாளர் முருகேசன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் கபிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பகுதியில் புதிய ஆட்டோமொபைல் கடை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளபாளையம் பேரூராட்சியின் பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய ஆட்டோமொபைல் கடையினை கோவை தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் முருகேசன் இன்று திறந்து வைத்து சிறப்பித்தார்.



கடை திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பள்ளபாளையம் பேரூர் கழக செயலாளர் கபிலன், கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், கவுன்சிலர் பத்மநாபன் மற்றும் கழக நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய ஆட்டோமொபைல் கடை பள்ளபாளையம் பகுதியில் வாகன சேவைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு வாகன விற்பனை மற்றும் பராமரிப்பு சேவைகள் எளிதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...