கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் Pawan Kumar Giriyappanar தலைமையில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பயிற்சி கூட்டம் இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று (25.03.2025) ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்பவன் குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர்சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 115-மேட்டுப்பாளையம், 116-சூலூர், 117-கவுண்டம்பாளையம், 118-கோயம்புத்தூர் வடக்கு, 119-தொண்டாமுத்தூர், 120-கோயமுத்தூர் தெற்கு, 121-சிங்காநல்லூர், 122-கிணத்துக்கடவு, 123-பொள்ளாச்சி மற்றும் 124-வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 366 எண்ணிக்கையிலான மண்டல அலுவலர்கள் மற்றும் 366 எண்ணிக்கையிலான உதவி மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது தொடர்பாகவும், வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வதும் குறித்தும் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றிட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் Ramakrishna Samy IAS, துணை ஆணையர் (கலால்) Dr. P Murugesan, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) Madhura, துணை ஆட்சியர் (பயிற்சி) Hari Priyanka, வட்டாட்சியர் (தேர்தல்) Thanikaivel மற்றும் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...