கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அடி ஆழமுள்ள தொட்டியில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 மணி நேரம் ஆகியும் மீட்பு பணி நடைபெறுகிறது.


Coimbatore: கோவையில், கழிவுநீர் தொட்டியில் மோட்டார் ரிப்பேர் செய்ய இறங்கிய 2 மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் தவறி விழுந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அவர்களது நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.




கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீர் ஆங்காங்கே கழிவுநீர் உந்து நிலையங்கள் மூலம் உக்கடம் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய மண்டலம் 69வது வார்டுக்கு உட்பட்ட சாய்பாபா காலனி பாரதி பார்க் 1வது வீதியில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.




இங்கு 15 அடி விட்டமும், 40 அடி ஆழமும் கொண்ட கழிவுநீர் தொட்டி உள்ளது. இதில் 60 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் மூலம் கழிவுநீர் பாதாள சாக்கடைக்குள் உந்தப்படுகிறது. இந்த மோட்டார் பழுதானதை அடுத்து, அதனை சரிசெய்து, கிரேன் மூலம் மீண்டும் தொட்டிக்குள் இறக்கும் பணியில் மாநகராட்சி தற்காலிக ஒப்பந்த ஊழியர்களான ரத்தினபுரியைச் சேர்ந்த அர்ஜுன்குமார் (38), மற்றும் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.




மோட்டாரை கீழே இறக்கி பொருத்திவிட்டு, இருவரும் ஏணிப்படிகள் மூலம் மேலே ஏறிக்கொண்டிருந்த போது, அர்ஜுன்குமாரின் தலை உள்ளேயிருந்த பைப்பில் இடித்ததில், நிலை தடுமாறி தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடன் சென்ற சுரேஷ் அவரை காப்பாற்றுவதற்காக கீழே இறங்கிய போது, அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக மயக்கம் ஏற்பட்டு, அவரும் தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.




இது குறித்து தகவல் அறிந்ததும் சக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித்துறை அதிகாரிகள், இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் தவறி விழுந்த தொட்டிக்குள் சுமார் 25 அடிக்கும் அதிகமாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் அதனை கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் வெளியேற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது.




இருவரும் தொட்டிக்குள் விழுந்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டதால், இருவரது நிலையும் என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலையுடன் சம்பவ இடத்தின் அருகே காத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.


Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...