உதகை மலை ரயில் தடத்தில் சரிந்த மண்ணை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், நீலகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.



இதில், உதகை மலை ரயில் தடத்திலும் மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரயில்வேத்துறை அதிகாரிகள் உதகை ரயில் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை பொக்லைன் மூலம் அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே, சீரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் தண்டவாளத்தில் விழுந்த மரத்தில் மோதிய சரக்கு ரயிலால் இருவர் காயம் அடைந்தனர்.



இந்த நிலையில் மலை ரயில் இயக்கப்படாததால் முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது, பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருவதால் நாளை முதல் மலை ரயில் சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...